Thursday, 21 February 2013

நீங்கள் வெற்றி பெற ஓர் அற்ப்புதமான தெய்விக வாய்ப்பு .

ஸ்ரீ பைரவரின் அருளாசியைப் பெறவும் , பைரவரின் காட்சி பெறவும் , உங்கள் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் நீங்கவும் , உங்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறவும் ஓர் அற்ப்புதமான வாய்ப்பு .

அடுத்து வரும் ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் அல்லது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர், சன்னிதானத்திற்கு செல்லுங்கள் . இரண்டு நெய் தீபம் பைரவர் சந்நிதியில் ஏற்றி , குறைந்தது
கால் கிலோ டைமண்ட் கல்கண்டு படையுங்கள், அருகிலே அமர்ந்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது உங்களுடைய பிரார்த்தனை அல்லது கோரிக்கை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள்.

பிரார்த்தனை செய்து முடித்தப்பின்னர், அந்த டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள். மீதியை நீங்கள் வீட்டுக்குக்  கொண்டு செல்லுங்கள். அடுத்த சில மணித்துளிகள் / நாட்கள் / வாரங்களில் உங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறிவிடும். முடிந்தால் இத்துடன் மரிக்கொழுந்து, செவ்வரளி, அவல்பாயாசத்துடன் பிரார்த்தனை செய்வது மிகவும் நல்லது.

மேலும் தகவல்களை ஆன்மிக கடலில் பாருங்கள்.

நன்றி - அய்யா திரு. சிவமாரியப்பன் அவர்கள். திரு .வீரமுனி அவர்கள்.

Friday, 15 February 2013

மரங்களே மனிதனின் முதல் தெய்வம் .
இந்த பிரபஞ்சத்தில் மனிதன் மட்டுமல்ல பல்வேறு உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன .  அத்தனை உயிர்களுக்கும் பொதுவான தேவை காற்று ..மாசு படாத காற்று.  ஆம் நமது சுற்று சூழல் எந்தளவுக்கு தூய்மையாக உள்ளதோ அந்தளவுக்கு அணைத்து ஜீவராசிகளுக்கும்   இந்த பூமியானது சொர்க்கமாக  அமையும் . 

இந்த பூமியில் தாவரங்கள் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டுமென்பது படைப்பின் நியதி . இந்த பூமியின் முதல் ஜீவனே பாசி எனப்படும் தாவர இனமே . இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரும் காவலனாக விளங்கிவருபவை மரங்களும் தாவர இனங்களுமே. தாவரங்களின், மரங்களின் அழிவு காரணமாக உலகே வாழத் தகுதியற்றதாகி வருகிறது . அதற்க்கு காரணம்  மனித இனமே.  இன்று மிகப் பெரும் அழிவை நோக்கி செல்லக் காரணம் மரங்களை அவன் அழித்ததே .
இந்தியாவைப் பொருத்தவரை 33% காடுகள் இருக்க வேண்டும் என்பதே இயற்கையின் படைப்பு  நியதி, ஆனால் இன்று இருப்பதோ 18% மட்டுமே.  நமது தேவையான மீத 15%  காடுகளை உருவாக நாம் 154 கோடி மரங்களை நடவேண்டும் ,  நட்டே ஆக வேண்டும் , இது நமது ஒவ்வொருவரின் தலையாய மனித நேய,  ஆன்மிக கடமை.

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மரம் வளர்க்க வேண்டியது மிக முக்கிய கடமை.  ஆன்மிக தர்மமும் அதுவே.  வாருங்கள் நாம் கரம் கோர்ப்போம் . வனம் உருவாக்குவோம் . நல்ல மனம் உருவாக்குவோம்.


மேலும் விபரங்களுக்கு: 

Tuesday, 12 February 2013

மஹா கும்பாபிஷேகம்

ஆன்மிக நண்பனின் வாசகர்கள , ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்று நாம் ஒரு விசேஷமான திருத்தலத்தின் மஹா கும்பாபிஷேக பத்திரிக்கையுடனும்  அந்த திருத்தலத்தின் முக்கிய  தகவல்களுடனும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

இரத்த சம்பந்தமான அனைத்து வியாதிகளையும் நீக்கும் ஓர் அற்புத திருத்தலமே நாகை  மாவட்டம் , குத்தாலம் தாலுக்கா ,ஏழு மகளூர் வட்டம்,சப்தகன்னிகாபுரம் ஸ்ரீ அமிர்த நாயகி சமேத ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் .


சப்த கன்னிகைகளான  இந்திராணி, பிராம்மி, கௌமாரி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, ரௌத்ரிணி  ஆகியோர் குடி கொண்டு, தேடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் நல்லாசிகளை அள்ளி வழங்கும் அற்புத திருத்தலம் இது.

இந்த திருத்தலத்தின் மண் மிக சிறந்த மருந்தாக சொல்லப்படுகிறது. இந்த இறைவன் நஞ்சையே அரு மருந்தாக்கியதால், அவரை வேண்டிக்கொண்டு இங்குள்ள மண்ணை  பூசிக் கொள்ளும் ஒருவருக்கு இரத்த சம்பந்தமான வியாதிகள் அனைத்தும் நீங்கும்  என்பது அபூர்வமான உண்மை.

இத்தகைய மிக சக்திவாய்ந்த இந்த திருக்கோவில் வருகிற தை 29 ஆம் தேதி (11-02-2013) முதல்  மாசி மாதம் 2 (14-02-2013) வரை கும்பாபிஷேகம் காண இருக்கிறது . ஆன்மிக அன்பர்கள் இந்த  அற்புத நிகழ்வினை பயன்படுத்திக் கொள்ள இந்த ஆன்மிக நண்பன் அழைக்கிறேன் . வாருங்கள் ...பல்லாண்டு வாழுங்கள்.

Saturday, 9 February 2013

ஆன்மிகம் என்றால் என்ன? பகுதி 2

ஆன்மிக தேடலில் மூழ்கி முத்தெடுக்கத் துடிக்கும்  எமது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உங்கள் சக பயணியான இந்த ஆன்மிக நண்பனின் வாழ்த்துக்கள் .

மிகவும் வேகமாக வளர்ந்து (!) வரும் அறிவியலின் வளர்ச்சி காரணமாக இன்று பழமைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. 


இந்நிலையில் ஆன்மிகம் என்பது வெறுமனே கோவில்களுக்கு அல்லது ஜீவ சமாதிகளுக்கு செல்வது , பத்து ரூபாய் செலவு செய்து பலகோடி ரூபாய்க்கு அதிபதியாக வேண்டுமென இறைவனிடம் அல்லது சித்தரிடம் (சிலையிடம் !!) கோரிக்கை வைப்பது என்று மிகவும் வெளிமுகமாக , சுற்றுலா சென்று வருவதைப் போல் தான் ஆன்மிகம் உள்ளது .

Friday, 8 February 2013

ஆன்மிகம் என்றால் என்ன? பகுதி 1வணக்கம், நாம் ஒவ்வொருவரும் ஆனந்தமாக இருக்கவே விரும்புகிறோம் அதற்கான தொடர்ந்த முயற்சிகளால்தான் இன்றைய இந்த உலகத்தின் வளர்ச்சி நம் முன் விரிகிறது .


எவ்வளவுதான் பொருட்களை, வசதிகளை, கண்டுபிடிப்புகளை நாம் பெற்றிருந்தாலும் நமக்கு கிடைக்கும் ஆனந்தமானது மிகவும் சிறியதாக குறுகிய கால  அளவு கொண்டதாகவே இருக்கிறது. 
Related Posts Plugin for WordPress, Blogger...