Saturday 9 February 2013

ஆன்மிகம் என்றால் என்ன? பகுதி 2

ஆன்மிக தேடலில் மூழ்கி முத்தெடுக்கத் துடிக்கும்  எமது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உங்கள் சக பயணியான இந்த ஆன்மிக நண்பனின் வாழ்த்துக்கள் .

மிகவும் வேகமாக வளர்ந்து (!) வரும் அறிவியலின் வளர்ச்சி காரணமாக இன்று பழமைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. 


இந்நிலையில் ஆன்மிகம் என்பது வெறுமனே கோவில்களுக்கு அல்லது ஜீவ சமாதிகளுக்கு செல்வது , பத்து ரூபாய் செலவு செய்து பலகோடி ரூபாய்க்கு அதிபதியாக வேண்டுமென இறைவனிடம் அல்லது சித்தரிடம் (சிலையிடம் !!) கோரிக்கை வைப்பது என்று மிகவும் வெளிமுகமாக , சுற்றுலா சென்று வருவதைப் போல் தான் ஆன்மிகம் உள்ளது .


இன்னும் சிலரோ தாங்கள் ஆன்மிக வாதிகள் என்று உலகுக்கு அறிவிக்கும் வண்ணம் புற அடையாளங்களை செய்து புகழ் மற்றும் பணம் கிடைக்க மிக நல்ல  வழியாக ஆன்மிகத்தை வளர்க்கின்றனர்(!!.)


தாங்கள் கோவில் கோவிலாக செல்வதையும் , அந்த கோவிலில் எனக்கு இந்த மாதிரியான அதிர்வுகள் தோன்றின, இந்த கோவிலில் எனக்கு அந்த மாதிரியான அதிர்வுகள் தோன்றின , எனக்கு இறைவனும்  இறைதன்மையும்  புரிபட்டு விட்டது , என்று சிலர் கூசாமல் பிறர் தம்மை புகழ  வேண்டும், மரியாதை செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர் .


 சரி .. உண்மையான ஆன்மிகம் என்பது என்ன ...? 

அடுத்த பதிவில் தொடர்வோம் ......

2 comments:

  1. ஆன்மிகமா ஆன்மீகமா, அல்லது இரண்டுமே சரியா?

    ReplyDelete
  2. when the series will over or how many series are there in this topic?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...